வணிகம்

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு: அதிக மக்களுக்கு காப்பீடு சென்றடையும்- ஐஆர்டிஏ தலைவர் விஜயன் தகவல்

செய்திப்பிரிவு

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித் திருப்பதன் மூலம் பல சாதகமான விஷயங்கள் நடக்க இருக்கிறது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு அமைப்பின் (ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் தெரிவித்திருக்கிறார்.

பிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ காப்பீடு மாநாட்டில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

அந்நிய முதலீடு என்பது முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் இந்த துறைக்கு கூடுதல் முதலீடுகள் கிடைக்கும். அதிக மக்களுக்கு காப்பீடு கிடைக்க வேண்டும் என்றால் முதலீடு தேவை. இப்போது முதலீடு வர தொடங்கி இருப்பதால் காப்பீட்டின் பயன் அதிக மக்களுக்கு சென்றடையும்.

அந்நிய முதலீட்டை அதிகப் படுத்துவது குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பங்குகளின் விலையை தீர்மானிப்பதுதான் முக்கிய விவாதமாக இருக்கிறது. இதில் சுமூக உடன்பாடு எட்டப் பட்ட பிறகு காப்பீட்டு நிறுவனங் களில் அந்நிய முதலீடு உயரும்.

சென்னை மழை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து விவா வித்து வருகிறோம். தினமும் தகவல்களை திரட்டி வருகி றோம். காப்பீட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விதிமுறைகளை தளர்த்துமாறு கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கேட்புத் தொகை (கிளைம்) கொடுக் கப்படுகிறது என்பது குறித்து கவனித்துவருகிறோம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து கேட்புத் தொகைகளும் கொடுக்கப்படும்.

மருத்துவ காப்பீட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர எளிய மக்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

காப்பீடு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் சென்றடைந்து, செலுத்துத் தொகையைக் குறைக்க வேண்டும். காப்பீட்டு துறையை விரிவுபடுத்த சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் உதவவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் லைப், பார்தி ஆக்ஸா, மேக்ஸ் பூபா உள்ளிட்ட நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்திருக்கிறது.

SCROLL FOR NEXT