வணிகம்

ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிவு

பிடிஐ

கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூட் டமைப்பு (ஒபெக்) எண்ணெய் உற் பத்தியை தற்போதைய நிலையிலே தொடர முடிவு செய்திருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருப்பதால் ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய விலையை நோக்கி கச்சா எண்ணெய் செல்கிறது.

டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 5.8 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 37.65 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 5.3 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 40.73 டாலராகவும் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு குறைந்த விலை இதுவாகும்.

அமெரிக்காவின் பெடரல் மத்திய வங்கி, வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்க(எப்.ஓ.எம்.சி.) அடுத்த வாரம் கூடுகிறது. அப்போது வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலர் மதிப்பு உயரும். அப்போது மற்ற நாடுகளின் நாணய மதிப்பு சரியும். கச்சா எண்ணெய் விலை டாலரில் முடிவு செய்யப்படுவதால் நாணயத்தின் மதிப்பு குறைந்த நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் தேவை குறையும் என்பதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி அதி கரிப்பின் காரணமாக தொடர்ந்து விலை குறைந்து வருவது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT