ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகனங்கள் எனப்படும் எஸ்யுவி தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக பெட்ரோலில் இயங்கும் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஜனவரி 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 2,000 சிசிக்கும் அதிகமான எஸ்யுவி-க்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் பெரு மளவு பாதிக்கப்பட்ட நிறுவனங் களில் மஹிந்திராவும் ஒன்று. இந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் 2,000 சிசிக்கும் அதிகமானவை. அத்துடன் பெரும்பாலும் டீசலில் இயங்கும் வாகனத் தயாரிப்பில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
தற்போது பெட்ரோலில் இயங்கும் கேயுவி100 எனும் புதிய மாடல் எஸ்யுவி-யை அறிமுகப்படுத்த உள்ளதாக கோயங்கா மேலும் தெரிவித்தார். டீசலில் இயங்கும் கேயுவி 100 தயாரிக்கப்பட்டு வெளிவர உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கேயுவி அறிமுகத்தின் மூலம் எஸ்யுவி பிரிவில் புதிய அத்தியா யத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா படைக்க உள்ளது. புதிய மாடலான கேயுவி 100 நிச்சயம் அனைத்து தரப்பிலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
புதிய மாடல் வடிவமைப்பு மற் றும் மேம்பாட்டுக்காக நிறுவனம் ரூ. 500 கோடியை செலவிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதற் கான வடிவமைப்பு உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக அவர் குறிப்பிட்டார். எம்-பால் கன் இன்ஜின் உற்பத்தி தளத்தில் புதிய கேயுவி 100 மாடல் எஸ்யுவி கார்கள் தயாராக உள்ளதாக அவர் கூறினார். புணேயில் உள்ள சக்கன் ஆலையில் தயாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இளம் தலைமுறையினரை வெகு வாகக் கவரும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரவீண் ஷா தெரிவித்தார்.
5 பேர் பயணிக்கும் வகையி லான இப்புதிய மாடலில் பயன் படுத்தப்பட்ட கருவிகளில் 18 காப் புரிமைக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் கொரியாவின் சாங்யோங் நிறுவன ஆலோசனையின் பேரில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக வும் அவர் கூறினார்.
இப்புதிய மாடல் ஹுண்டாய் கிராண்ட் மற்றும் ஃபோர்டு பிகோ மாடல்களுக்குப் போட்டி யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேயுவி 100 மாடல் காருக்கு பாலிவுட் நடிகர் வருண் தவன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7 கண்கவர் வண்ணங்களில் வெளியாக உள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் 8-வது புதிய அறிமுகமாகும்.