வணிகம்

பார்தி ஏர்டெல் ரூ.60,000 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

பார்தி ஏர்டெல் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது. தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற சேவைகளை மேம்படுத்த இந்த முதலீடுகளை மேற்கொள்கிறது. இதற்கு புராஜெக்ட் லீப் என பெயரிட் டுள்ளது. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஏர்டெல் இதை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் தங்களது நெட்வொர்கை விரிவுபடுத் துவது மற்றும் தகவல் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவை வழங்குவது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 2016 காலகட்டத்துக்குள் 60 சதவீத ஏர்டெல் நெட்வொர்க்குகளை மொபைல் பிராட்பேண்ட் சேவைக் குள் கொண்டுவருவது திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளது.

கிராமம், நகரம், வீடுகள் மற்றும் வணிக மையங்கள் என வாடிக்கையாளர் அடித்தளம் கொண்டுள்ளோம்.

இவர்களுக்கான தனித்தன்மை யான வாடிக்கையாளர் சேவை வழங்குவதற்கும், எதிர்கால நெட்வொர்க்கை கட்டமைக்கும் முயற்சியாகவும் இருக்கும் என்று நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவு நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT