கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக், நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து கூறியதாவது:
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டு வந்த சூழலில் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தொழில்துறையினரைக் காக்க வும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய சூழல் தற்போது உருவெடுத்துள்ளது.
இதற்கு தொழில் நிறுவனங் களுக்கு நிதியுதவி அளிப்பதுதான் தீர்வாக இருக்கும். இதை மேற் கொள்ள கரன்சி அச்சடிப்பதுதான் ஒரே வழி. ஏழை மக்களுக்கு நேரடி பண பரிமாற்ற உதவியானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இதற்கு ரூ. 1 லட்சம் கோடி முதல் ரூ. 2 லட்சம் கோடி வரை தேவை. இதை மேற்கொள்வதால் நுகர்வு அதிகரித்து பொருளாதாரம் மீட்சியடையும். ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் அவசியம். கடந்த ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க ரூ.5 லட்சம் கோடி வரை வங்கிகள் மீட்பு திட்டத்தை மேற்கொண்டன. இதை மேலும் விரிவுபடுத்தலாம் என்றும் உதய் கோடக் கூறினார்.