நெஸ்லே இந்தியா இந்த நிதியா ண்டில் இரண்டாவது முறையாக ரூ.154.26 கோடியை இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மாகி நூடுல்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு வந்த நெஸ்லே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் என்பதால் ஒரு பங்குக்கு 16 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவுள்ள தாக நெஸ்லே இந்தியா தெரிவித் துள்ளது.
இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 23-ம் தேதி யிலிருந்து இந்த டிவிடெண்ட் தொகை வழங்கப்படும் என கூறி யுள்ளது.
கடந்த மே மாதம் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 14 ரூபாயை இடைக்கால டிவிடெண் டாக அறிவித்தது. இந்த டிவி டெண்ட் தொகை ஜூன் 12-ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிலவர படி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியாவின் பங்கின் விலை 5,873 ரூபாய்.