வணிகம்

பங்குச் சந்தையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.6,500 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

கடந்த நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் 6,500 கோடி ரூபாய் நிகர முதலீடு செய்திருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 58,000 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 40,722 கோடி ரூபாயை முதலீடு செய்தன. ஆனால் இந்த நிதி ஆண்டில் இன்னும் நான்கு மாதங்கள் மீதம் இருக்கும் நிலையில் கடந்த நிதி ஆண்டில் முதலீடு செய்த தொகையை விட அதிகமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த 2009-10 முதல் 2013-14-ம் நிதி ஆண்டு வரை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் 68,000 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்தனர். 2008-09ம் நிதி ஆண்டில் 6,985 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.

செபி தகவல்கள் படி கடந்த நவம்பர் மாதம் மட்டும் 6,548 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் 2,935 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது. சீனாவின் கரன்ஸி யான யூவானின் மதிப்பு குறைக் கப்பட்டபோது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்தன.

SCROLL FOR NEXT