டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.மரியாதை நிமித்தமாக இந்தசந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பு விழாவுக்கு ரத்தன் டாடா மற்றும் சைரஸ் மிஸ்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால், விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து பிரதமரை நேரில் சந்தித்து பேசினார்.
உப்பு முதல் சாஃப்ட்வேர் வரை அனைத்துத் துறைகளிலும் உள்ள டாடா குழுமத்தின் தலைவராக 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் மிஸ்திரி. ரத்தன் டாடா இப்போது சிறப்புத் தலைவராக (எமிரேடஸ்) உள்ளார். இக்குழு நிறுவனங்களின் சொத்து மதிப்பு 9,679 கோடி டாலராகும். பிரதமர் மோடி தலைமையிலான ஸ்திரமான அரசு அமைந்துள்ளதால் தொழில்துறை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.