டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி யாக சுமி கோஷ் நியமிக்கப்பட்டி ருக்கிறார். வரும் ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார். தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி அவானி தவ்தா (Avani Davda) தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவும், இதர வாய்ப்புகளுக்காகவும் ராஜிநாமா செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
டாடா குழுமம் மற்றும் ஸ்டார் பக்ஸ் ஆகியவற்றின் 50:50 கூட்டு நிறுவனமாகும். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து அவானி தலைமைச் செயல் அதிகாரி யாக பணியாற்றிவந்தார்.
சுமி கோஷ் ஸ்டார்பக்ஸ் நிறுவ னத்தில் கடந்த எட்டு வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது ஸ்டார்பக்ஸ் மிட்வெஸ்ட்ரன் பகுதி யின் துணைத்தலைவராக உள்ளார்.