அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை நிச்சயம் உயர்த்தும் என்று என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தா வில் நடந்த ரிச்ர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் இவ்வாறு ராஜன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
அடுத்த வாரம் நடக்க இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கூட் டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்து வதற்கு 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்.
இதனால் ஏற்படும் ஏற்ற இறங்கங்களை சமாளிக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. என்ன நடக்கும் என்பதை முழுமையாக கணிக்க முடியாது என்று ரகுராம் ராஜன் கூறினார்.
இதே கருத்தைதான் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உர்ஜித் படேலும் கூறினார். வட்டி விகிதத்தை உயர்த்துவது என்பது கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அமெரிக்க மத்திய வங்கி கூறியிருக்கும் கருத்துகளைப் பார்க்கும்போது நாங்கள் வட்டி விகிதத்தை எதிர்பார்க்கிறோம். இதனால் இந்திய நிதிச்சந்தையில் சில மாற்றங்களை எதிர்பார்க்க லாம் என்றார்.
அமெரிக்காவின் கடன் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகளை எடுக்க, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் 16-ம் தேதி கூடுகிறது. தற்போது அமெரிக்கா வில் வட்டி விகிதம் பூஜ்ஜியம் என்ற நிலையிலே இருக்கிறது. பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.