சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஸைனர்ஜி சோலார் நிறுவனம் கோஹ்லி வென்ச்சர் நிறுவனத்திடமிருந்து முதலீடுகளை திரட்டுகிறது. தமிழகத்தில் புதிய உற்பத்திப் பிரிவை அமைப்பதற்காக கோஹ்லி முதலீடு மேற்கொள் கிறது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று சென்னையில் கையெழுத் தானது. இதில் பேசிய ஸைனர்ஜி குழுமத்தின் நிர்வாக இயக்கு நரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ரோஹித் ரவீந்தரநாத், ``இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டின் நாங்கு நேரியில் மிகப் பெரிய நவீன உற்பத்தி பிரிவைத் தொடங்க உள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.
2011-ல் தனிப்பட்ட முதலீட் டைக் கொண்டு தொடங்கப்பட்ட ஸைனர்ஜி சோலார் 2011-12 ஆம் ஆண்டில் ரூபாய் 4 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்தது. 2015-16 நிதியாண்டின் ரூபாய் 100 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. பிரிட் டனை மையமாகக் கொண்டு இயங்கும் கோஹ்லி வென்ச்சர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக 10 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம் சூரிய சக்தி துறையில் இந்தி யாவில் மேற்கொள்ளும் முதல் முதலீடு இது.
இது தொடர்பாக பேசிய கோஹ்லி வென்ச்சர்ஸ் நிறுவ னத்தின் தலைவர் தேஜ் கோஹ்லி “இந்திய கிராமப் புற மக்களுக்கான மின் தேவை களுக்கான ஸைனர்ஜி சோலார் நிறுவனத்தோடு கை கோர்க் கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
ஸைனர்ஜி நிறுவனம் சூரிய சக்தி தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி கருவிகள் தயாரிக்கும் மையத்தை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான ஏற்கெ னவே தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.