வணிகம்

ஜிஎஸ்டி அமலாக்கம்: இந்தியா சரியான பாதையில் பயணிக்கிறது- நிதி ஆயோக் துணைத் தலைவர் பேச்சு

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற் கொள்வதில் இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக் கிறது என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித் துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர ரக தொழில்துறை (எம்எஸ்எம்இ) தொடர்பாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியது: ஒற்றை வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு விதிக்கும் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வரியும் ஒருமுகமாக ஒருங்கிணைக்கப்பட்டு ஒருமுனை வரியாகும். இதனால் பன்முக வரி விதிப்பு முறை முற்றிலுமாக நீங்கும். அதேபோல மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) முற்றி லுமாக ஒழியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா மற்றும் ரியல் எஸ்டேட் மசோதா குறித்து மாநிலங் களவையில் இந்த வாரம் விவா திக்கப்பட உள்ளதாக நாடாளு மன்ற விவகாரத்துறை இணை யமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவாதிக்க 4 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கத்தால் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்த பனகாரியா, ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் இதன் தாக்கம் நடப்பு நிதி ஆண்டில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சுட்டிக் காட்டினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு வரிச் சலுகை வேண்டும் என கேட்பதற்குப் பதிலாக அவற்றின் திறனை மேம்படுத்தி சர்வதேச அளவில் போட்டியிடும் நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். இதன் மூலம் அவற்றின் லாபம் அதிகரிக்கும் என்று பன காரியா சுட்டிக் காட்டினார்.

மாறிவரும் பொருளாதார வளர்ச்சி சூழலில் தொழில் நிறுவ னங்கள் உற்பத்தி அதிகரிப்பு, திறன் மேம்பாடு இவற்றின் மூலம் உள்நாட்டில் மிகப் பெரிய சந்தை வாய்ப்புகளைப் பிடிப்பதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

சீனாவைப் போன்ற பொரு ளாதார வளர்ச்சியை எட்ட வேண்டு மானால் அதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும். வரி சீர்திருத் தம் அவசியம். இல்லையெனில் வளர்ச்சி சாத்தியமாகாது என்று அவர் குறிப்பிட்டார். தொழில் துறை வளர்ச்சிக்கு தொழிலாளர் சட்ட திருத்தம் மிகவும் அவசியம். இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் பனகாரியா கூறினார்.

SCROLL FOR NEXT