இந்தியாவில் 76 சதவீத இளைஞர்கள் பணவீக்கம், கூட்டு வட்டி, முதலீடுகளை பிரித்து பலவற்றில் முதலீடு செய்வது போன்ற நிதி சார்ந்த கொள்கைகளை போதுமான அளவிற்கு புரிந்து கொள்வதில்லை என்று ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் சர்வதேச நிதி சார்ந்த அறிவு பற்றி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் நிதி சார்ந்த அறிவு சர்வதேச சராசரியை விட இந்தி யாவில் குறைவாக உள்ளது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
முதலீடுகளை பிரித்து பலவற்றில் முதலீடு செய்வது சம்பந்தப்பட்ட கேள்வி களுக்கு 14 சதவீத இந்திய இளை ஞர்கள் மட்டுமே சரியாக விடை யளித்துள்ளார்கள். பணவீக்கம் தொடர்பான கேள்விகளுக்கு 56 சதவீத இளைஞர்கள் சரியான பதிலை அளித்துள்ளார்கள். 51 சதவீத இளைஞர்கள் கூட்டு வட்டி பற்றி புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் 60 சதவீத பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 26 சதவீத இளைஞர்கள் நிதி சார்ந்த அறிவை பெற்றுள்ளனர். 40 சதவீத ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 20 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிதி சார்ந்த அறிவை பெற்றுள்ளனர்
உலகளவில் பணக்கார குடும்பங்களைச் சார்ந்த 36 சதவீத இளைஞர்களும் 27 சதவீத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் நிதி சார்ந்த அறிவை பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு 140 நாடுகளைச் சார்ந்த 1,50,000 இளைஞர்களை நேர்காணலுக்கு வரவழைத்து நடத்தப்பட்டதாகும். இந்த இளைஞர்களுக்கு தனித் தனியாக பணவீக்கம், கூட்டு வட்டி, முதலீடுகளை பிரித்து பலவற்றில் முதலீடு செய்வது, எண்ணறிவு ஆகிய நான்கு அடிப்படை நிதி கொள்கைகள் பற்றி தேர்வு நடத்தப்பட்டது.
ஆசியாவிலேயே அதிகமாக சிங்கப்பூர் இளைஞர்களில் 59 சதவீதம் பேர் நிதி சார்ந்த அறிவை பெற்றுள்ளனர். இது சீனாவில் 28 சதவீதமாகவும், ஹாங்காங் மற்றும் ஜப்பானும் சேர்ந்து 43 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் 73 சதவீத ஆண்களுக்கும் 80 சதவீத பெணகளுக்கும் போதுமான நிதி சார்ந்த அறிவு இல்லை என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.