வணிகம்

‘நடப்பு கணக்கு பற்றாக்குறை 2,500 கோடி டாலருக்குள் இருக்கும்’

பிடிஐ

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2,500 கோடி டாலருக்குள் இருக்கும் என்று நிதிச்சேவை நிறுவனமான பார்கிளேஸ் தெரிவித்திருக்கிறது.

இந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:நாட்டின் வளர்ச்சி கணிசமாக இருப்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாளுவதில் பெரிய சிக்கல் இருக்காது. தவிர கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதகம்.

செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8.2 பில்லியன் டாலர் ஆகும். இரண்டாம் காலாண்டில் 6.1 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 14.3 பில்லியன் டாலராக நடப்பு கணக்கு பற்றாக்குறை இருக்கிறது.

சர்வதேச சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் 2,500 கோடி டாலர் அளவுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை இருக்கும் என்று பார்கிளேஸ் தெரிவித்திருக் கிறது.

SCROLL FOR NEXT