வரும் 2016-ம் ஆண்டில் தனியார் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், பணியாளர்களுக்கு 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் துறை மற்றும் மேக் இன் இந்தியா செயல்பாடுகளால் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது நிதிக்குழு பரிந்துரை அமலாக்கத்தால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட் டுள்ளது.
2015-ம் ஆண்டில் வேலை வாய்ப்பு, ஊதிய உயர்வு ஆகிய வற்றில் ஏற்ற, இறக்க நிலை நிலவினாலும் முந்தைய 2014-ம் ஆண்டைக் காட்டிலும் ஓரளவு சிறப்பாக இருந்தது. இதைக் காட்டிலும் வரும் ஆண்டில் நிலைமை மேம்படும் என்றும் அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை அளிப்பதன் பலன் அடுத்த ஆண்டு தெரியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குளோபல் ஹன்ட் என்ற நிறுவனம் இத்தகைய மதிப்பீடுகளை வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களின் பலன் அடுத்த ஆண்டு நிச்சயம் தெரியும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கோயல் தெரிவித்துள்ளார்.
88 சதவீத நிறுவனங்கள் 2016-ல் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பணியாளர்களை தேர்வு செய்து அளிக்கும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அதிகமுள்ள 42 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது. அதேபோல ஊழியர்களின் ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் 4.7 சதவீத உயர் வும் ஒட்டுமொத்தமாக 10.3 சதவீத உயர்வும் இருக்கும் என கணித் துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள் வரும் ஆண்டில் அதிக பட்ச வளர்ச்சியை எதிர்நோக் கியிருக்கின்றன. இதனால் அதிக அளவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்புள் ளதாக டீம்லீஸ் நிறுவனம் தெரி வித்துள்ளது. மேலும் மத்திய அரசின் முக்கிய திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் திட்டம் அடுத்த ஆண்டில் செயல் வடிவம் பெறும். இது வளர்ச்சிக்கு மேலும் வழிவகுக்கும். இதனால் இரண்டாம் நிலை நகரங்களில் அதிக வேலை வாய்ப்பு உருவாகும். குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும் என்று கோயல் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் பணியா ளர்கள் மத்திய அரசு பணியாளர் களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளைக் கண்டு மிகுந்த அதிருப்தியை 70 சதவீத பணியா ளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தனியார் துறையை தாங்கள் தேர்வு செய்தது தவறோ என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றி யுள்ளது. இதனால் சாதாரணமாக பணியாளர்களுக்கு 12 சதவீதம் முதல் 14 சதவீத ஊதிய உயர்வு இருக்கும் என்றும் முக்கிய பணியாளர்களுக்கு 25% முதல் 30% வரை உயர்வு இருக்கும் என கோயல் தெரிவித்துள்ளார்.