வணிகம்

டிரைவர் இல்லாத கார் தயாரிப்பு: ஃபோர்டு நிறுவனத்துடன் கூகுள் பேச்சுவார்த்தை

ராய்ட்டர்ஸ்

டிரைவர் இல்லாத கார் தயாரிப்பு தொடர்பாக ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானால் இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் லாஸ் வேகாஸில் நடைபெற உள்ள சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி யில் வெளியாகலாம் என்று ஆட்டோமோடிவ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள் ளது. யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவித்த போதிலும், கூகுள் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டுத் தொடக் கத்தில் கூகுள் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் உதிரி பாக சப்ளைதாரர்களுடன் பேச்சு நடத்தியது. 2020-ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்க வேண் டும் என்ற நோக்கத்தோடு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் முட்டை வடிவிலான டிரைவர் இல்லாத காரை மவுண்டன் வியூ பகுதியில் உள்ள சாலைகளில் சோதனை ரீதியில் கூகுள் நிறுவனம் இயக்கிப் பார்த்தது. இதேபோல ஆஸ்டின் கார்களிலும் இந்த சோதனையை இந்நிறுவனம் நடத்தியுள்ளது.

டிரைவர் இல்லாத வாடகைக் கார்களை இயக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் தயாரிப்பு பிரிவானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்கார்ப்பரேஷனின் தனி நிறுவனமாக செயல்படும். இது அடுத்த ஆண்டு தொடங்கப் படலாம் என்று புளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட் டுள்ளது.

டிரைவர் இல்லாத கார் தயாரிப்பில் பிற போட்டி நிறுவனங்களுடன் ஃபோர்டு நிறுவனம் பின்தங்கியுள்ள போதிலும், இந்த ஆண்டு தொடக் கத்தில் இதற்கான முயற்சி யில் ஃபோர்டு இறங்கியுள்ள தாக செய்திகள் வெளியாகின. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தானாக செயல்படும் பிரேக், சில குறிப்பிட்ட தருணங்களில் மனிதர்களின் கை அசைவு தேவைப்படாத ஆட்டோ மேட்டிக் முறை என சில முக்கிய மான செயல்பாடுகளுக்கு குறிப் பாக ஸ்டீயரிங், பிரேக்கிங் மற்றும் ஆக்சிலேரேட்டர் ஆகியவற்றில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இத்தகைய வசதியை சர்வதேச அளவில் அனைத்து தயாரிப்புகளிலும் அடுத்த 5 ஆண்டுகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT