வணிகம்

மல்பரி கச்சா பட்டுக்கு தடுப்பு வரிவிதிக்க அரசு பரிசீலனை

பிடிஐ

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மல்பரி கச்சா பட்டு நூலுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ. 122 வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு தொழில்களைக் காக்கும் வகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மல்பரி கச்சா பட்டுக்கு பொருள் குவிப்பு வரி விதிப்பு முறை மூலம் கூடுதலாக வரி விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2010-11-ம் ஆண்டு 12.63 லட்சம் கிலோ மல்பரி இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த 2013-14-ம் ஆண்டில் 22.17 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கூடுதல் வரி விதிக்க வேண்டும் என பொருள் குவிப்பு தடுப்பு வரித்துறை இயக்குநரகம் மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

SCROLL FOR NEXT