என்டிபிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு). கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
பாட்னா அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் 1977-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். பிறகு 1996-ம் டெல்லி தொழிலாளர் சட்டம் படித்தவர்.
1977-ம் ஆண்டு என்டிபிசி நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார். இந்த துறையில் 38 வருட அனுபவம் மிக்கவர்.
நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இணைந்தார். தொழில்நுட்ப பிரிவின் இயக்குநராக பொறுப்பேற்றார்.
நிறுவனத்தின் மரபு சாரா எரிசக்தி, கொள்கை முடிவுகள், தொழில்மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துக்கும் பொறுப்பானவர்.