பிர்லா குழுமத்தின் அங்கமான ஐடியா செல்லுலர் தொலைத் தொடர்பு நிறுவனம் தென் மாநிலங்களில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித் துள்ளது.
தற்போது 4 தொலைத் தொடர்பு வட்டங்களில் 75 நகரங்களில் இந்த சேவை கிடைக்கும். ஆந்திரம், தெலங் கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் இந்த சேவை அளிக்கப்படுவதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிறுவனம் 2016-ம் ஆண்டுக்குள் 750 நகரங்களுக்கு 4ஜி சேவையை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தென் மாநிலங்களில் குறிப்பாக கொச்சி, ஓசூர், மலப்புரம், கடப்பா, மதுரை, மைசூர், ராஜமுந்திரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இந்த சேவை கிடைக்கும். பெல்காம், கோழிக்கோடு, கடலூர், சித்ரதுர்கா, குண்டூர், காகிநாடா, காஞ்சிபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இம்மாத இறுதிக்குள் சேவை கொண்டுவரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருநகரங்களான பெங்க ளூரு, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம, மங்களூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு 2016-ம் ஆண்டு மார்ச் மாதத் துக்குள் இந்த சேவை அளிக் கப்படும் என நிறுவனம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிமன்ஷு கபானியா கூறியது: உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதும் 4ஜி சேவையைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் 4ஜி எல்டிஇ சேவையானது இந்நிறுவனத்தின் கம்பியில்லா பிராட்பேண்ட் இணைப்பை மேலும் அதிகரிக்க உதவும்.
ஐடியா நிறுவன வாடிக்கை யாளர்கள் ஏற்கெனவே தங்களது சிம் கார்டுக்குப் பதிலாக 4ஜி சிம்கார்டைப் பெற்று இதன் வேகத்தை உணரலாம். சலுகை விலையில் டிஜிட்டல் நுட்பம் மற்றும் சமீபத்திய இசை மற்றும் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நிறுவனம் செல்போன் உற்பத்தியாளர்களுடனும், ஆன்லைன் விற்பனை நிறுவ னங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 4ஜி ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிறுவன வாடிக்கையா ளர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் 4ஜி சேவையைப் பெற விண்ணப்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை சந்தைப் பிரிவு அதிகாரி சசி சங்கர் தெரிவித்துள்ளார்.
4ஜி சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனை யகங்களில் 4ஜி சிம் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே 3ஜி சேவைக்கான கட்டணைத்துக்கு இணையான கட்டணமே 4ஜி சேவையிலும் வசூலிக்கப்படும். 4ஜி டிரையல் பேக் மிகக் குறைந்த கட்டணமாக ரூ. 29-க்குக் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.