நாட்டின் ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மைனஸ் 1.99 சதவீதமாக உள்ளது. முந்தைய மாதத்தில் (அக்டோபர்) இது மைனஸ் 3.81 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருள்கள் குறிப்பாக பருப்புகளின் விலை உயர்வு காரணமாக ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் சிறிது அதிகரித்துள்ளது. இருப்பினும் பணவீக்க அளவு மைனஸ் நிலையி லேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங் களின்படி உணவுப் பொருள் களின் விலை 2.3 சதவீதம் அதிகரித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன், முட்டை உள்ளிட்ட பெரும் பாலான உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஆண்டு முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்த போதிலும் அது மைனஸ் நிலையிலேயே இருப்பதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.