வணிகம்

ஜெட் ஏர்வேஸ் சிஇஓ ராஜிநாமா

செய்திப்பிரிவு

சந்தை மதிப்பில் இந்தியாவின் 2-வது பெரிய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரமர் பால் ராஜிநாமா செய்திருக்கிறார். இருப்பினும் வரும் பிப்ரவரி 29-ம் தேதி வரை இந்த பதவியில் அவர் தொடருவார்.

புதிய வாய்ப்புகளை தேடுவதற் காக கிராமர் பால் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. நிறுவ னத்தின் முழு நேர இயக்குநரான கௌரங் ஷெட்டி தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்த வருட மார்ச் மாதம், இத்தாலிய நிறுவனமான அலிடாலியா (Alitalia) ஏர்லைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கிரமர் பால் பொறுப்பேற்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT