அதானி குழுமத்துடன் கைகோர்த்தது ஃபிளிப்கார்ட் நிறுவனம்.
இந்தியாவின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைகிறது. இதன்மூலம் பெருகிவரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை விநியோகிக்கலாம் என அந்நிறுவனம் கூறுகிறது.
இந்த முனையம் 2022ம் ஆண்டு மூன்றாவது காலாண்டு நிதியாண்டில் செயல்பாட்டுக்கும் வரும் எனத் தெரிகிறது.
இத்துடன் சென்னையில், அதானிகனெக்ஷ் பிரைவேட் லிமிடெட் டேட்டா சர்வீஸ் மையமும் தொடங்கப்படும் என ஃபிளிப்கார்ட் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதில் அதானி குழுமத்துக்கு யாரும் நிகரில்லை.
ரியல் எஸ்டேட், லாஜிஸ்டிக்ஸ், பசுமை எரிவாயு, டேட்டா மையங்கள் ஆகியவற்றில் அதானி சாதனை செய்திருக்கிறது. இதனால் எங்களது சப்ளை செயினை மேம்படுத்த அதானி குழுமத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.