பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் நடப் பாண்டில் 35,000 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் ஓ.என்.ஜி.சி. என்.டி.பி.சி. மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பங்குவிலக்கலை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நடப்பு 2015-ம் ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 35,236 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 18,000 கோடி ரூபாயும், 2013-ம் ஆண்டில் 22,000 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது. அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 50,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
பங்குவிலக்கல் துறை செய லாளர் ஆராதனா ஜோஹ்ரி கூறும்போது எங்கள் துறை 2016-ம் ஆண்டில் பங்குவிலக்கலை மேற் கொள்ள தயாராக உள்ளது. கோல் இந்தியா, என்டிபிசி, பிஹெச்இஎல் மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களில் பங்குவிலக்கலை மேற்கொள்ள இருக்கிறோம்.
காலத்துக்கு ஏற்றதுபோல நாங்கள் மாறி இருக்கிறோம். சந்தைக்கு கால அவகாசம் கொடுக் காமல், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப குறுகிய காலத்தில் பங்குவிலக்கலை மேற்கொள்ளு வோம். சர்வதேச சந்தை நிலவரங்கள் முதலீடுகளை திரட்டு வதற்கு சவாலாக உள்ளது. இருந் தாலும் பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்றுள்ளோம்.
2015-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீடு மற்றும் பங்கு விலக்கல்(ஓஎப்எஸ் முறை) இரண் டையும் சேர்த்து 48,700 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதில் பங்குவிலக்கல் மூலம் 35,236 கோடி ரூபாய். மொத்த நிதியில் 70 சதவீதத்துக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து திரட்டி யுள்ளோம் என்று கூறினார்.
இந்த வருடம் நடந்த பங்கு விலக்கலில் சிறுமுதலீட்டாளர் களின் பங்கு மிகவும் குறைவாகவே இருந்தது. பங்குவிலக்கல் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் இன்னொரு பொதுத்துறை நிறுவ னமான எல்.ஐ.சி.தான். அதே போல வெளிநாட்டு முதலீட்டாளர் களை சந்தித்தன் காரணமாக அவர் களுடைய முதலீடும் இருந்தது.
கடந்த வருடம் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடந்தது. இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் கடந்த ஜனவரியில் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் மூலம் 22,557 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு விலக்கல் மூலம் 9,300 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்த பங்குவிலக்கல் நடந்த அன்று சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்தன.
பவர் பைனான்ஸ் கார்ப் (ரூ.1,673), ஆர்.இ.சி. (ரூ.1,610) மற்றும் டிரெட்ஜிங் கார்ப் மூலம் 53 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பங்குச்சந்தை சூழ்நிலைகள் சரியில்லாததால் பங்குவிலக்கல் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதி ஆண்டில் 61,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.