தங்கத்தை பணமாக்கும் திட்டம் குறித்து விவாதிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) ரிசர்வ் வங்கி துணை கவர்னர் மற்றும் வங்கியாளர்களை சந்திக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருக் கிறது.
இம்மாத ஆரம்பத்தில் தொடங் கப்பட்ட இந்த திட்டத்துக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதால் இந்த திட்டத்தை வெற்றியடைய செய் வதற்கு கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சக்தி காந்த தாஸ் தலைமையில் இந்த கலந்தாய்வு கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கானும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
கோயில், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளிடம் வங்கிகள் இந்த திட்டத்தை பிரபலப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பொருளாதார விவகார அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை நாளை மறுசீராய்வு செய்யும் என்று மூத்த அதிகாரி கூறினார்.
இந்தியாவில் பயன்படுத் தப்படாமல் 20,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.52 லட்சம் கோடி. இந்த தங்கத்தை புழக்கத்துக்கு கொண்டு வருவதற்காக கடந்த 5-ம் தேதி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் நவம்பர் 18-ம் தேதி வரை 400 கிராம் தங்கம் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து ஏற்கெனவே நகைக்கடை அதிபர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.