வணிகம்

அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

செய்திப்பிரிவு

வரும் டிசம்பர் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி கடன் மற்றும் நிதிக்கொள்கை முடிவினை அறிவிக்க இருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேற்று சந்தித்து பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

பெரும்பாலான வல்லுநர்கள் டிசம்பர் 1-ம் தேதி வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அருண் ஜேட்லியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இந்தியாவில் வட்டி விகிதம் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமல்லாமல், அடுத்த மாதத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது, இது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் இதுவரை வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் மற்றும் நிதிக்கொள்கையில், குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT