இந்த வருடம் ஐபிஓ வெளியிட்ட 60 சதவீத நிறுவனங்களின் பங்கு கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த வருடம் 18 நிறுவனங்கள் தங்களது பொதுப்பங்கு வெளி யீட்டை (ஐபிஓ) செய்தன. இதில் 11 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
ஐபிஓ வந்த 18 நிறுவனங்களும் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி இருக் கின்றன. கடந்த நான்கு வருடங் களில் அதிகமாக நிதி திரட்டியது இந்த வருடத்தில்தான்.
எஸ்.ஹெச்.கெல்கர் அண்ட் கம்பெனி, இண்டர்குளோப் ஏவியேஷன், பிரபாத் டெய்ரி, புஷ்கர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், நவகர் கார்ப்பரேஷன், ஷின்ஜென் (Syngene) இன்டர்நேஷனல், மன்பசந்த் பீவரேஜஸ், பி.என்.சி. இன்பிராடெக், விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ், ஐநாக்ஸ் விண்ட் மற்றும் ஆர்டெல் கம்யூனி கேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.
எஸ்.ஹெச்.கெல்கர் கம்பெனி 180 ரூபாயில் வர்த்தகத்தை தொடங் கியது. இப்போது 21 சதவீதம் உயர்ந்து 218 ரூபாயில் வர்த்தக மாகிறது. இதேபோல இண்டிகோ 765 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 1089 ரூபாயில் வர்த்தகமாகிறது.
ஷைஜெனி இன்டர்நேஷனல் பங்கு 250 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 46 சதவீதம் உயர்ந்து 365 ரூபாயில் முடிவடைந்தது. அதேபோல பிஎன்சி இன்பிராடெக் வெளியீட்டு விலையை விட 40 சதவீதம் உயர்ந்தது வர்த்தக மாகிறது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது.
மாறாக, காபி டே, சத்பவ் இன்பிரா, பென்னார் இன்ஜி னீயரிங், பவர் மெக் புராஜக்ட்ஸ் யூ.எப்.ஓ மூவிஸ், எம்.இ.பி இன்பிரா மற்றும் அட்லேப்ஸ் என்டர் டெயின்மென்ட் ஆகிய பங்குகள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு 6 ஐபிஓ மட்டுமே வெளியானது. இதன் மூலம் 1,261 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது. அதேபோல 2013-ஆம் ஆண்டு 3 ஐபிஓ மட்டுமே வெளியானது.