கடந்த ஏப்ரல் மாதம் சிறிய தொழில் முனைவோர்கள் எளிதில் கடன் பெறுவதற்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் 24 லட்சம் பெண்கள் உட்பட 66 லட்சம் பேர் தொழில் தொடங்கு வதற்காக கடன் பெற்று பயனடைந் துள்ளதாக பிரதமர் மோடி தெரி வித்துள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, 66 லட்சம் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந் துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள் கிறேன். இதுவரை 42,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலித், பழங்குடியின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் அதிக பயனாளிகளாக இருக்கின்றனர்.
இந்த திட்டம் முடி வெட்டும் தொழில் செய்பவர்கள், பால் காரர், செய்தித்தாள் விற்பனை யாளர் ஆகியோரை போன்று சிறிய தொழில்களைச் செய்யக் கூடியவர்களுக்கு கடன் உதவி செய்யும் நோக்கத்தோடு ஆரம்பிக் கப்பட்டது என்று பேசினார்.
மேலும் இந்த திட்டம் சிறிய தொழில் முனைவோர்களின் தொழில்களை ஊக்குவிக்கவும், வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பு களை உருவாக்கவும், மக்க ளின் முன்னேற்றத்துக்கும் உதவு கிறது என்று தெரிவித்தார்.