ஓலா நிறுவனத்தின் புதிய தலை மை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஓ) ராஜிவ் பன்சால் நியமிக்கப்பட் டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவ னத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறப்போவதாக கடந்த அக்டோபரில் பன்சால் அறிவித்தார். நிதித் துறையில் 21 வருடங்கள் அனுபவம் மிக்க பன்சால், சுமார் 16 வருடங்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி யாற்றினார். தற்போது தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் மிதேஷ் ஷா, இனி ராஜிவ் பன்சால் குழுவில் இருப்பார் என்று ஓலா தெரிவித்துள்ளது. மேலும் ராஜிவ் பன்சால் எங்கள் இயக்குநர் குழுவில் இணைவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய இத்தனை வருட அனுபவம் எங்களுடைய வளர்ச்சிக்கு பயன்படும் என்று ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்தார். இந்தியாவின் சிறந்த நிறுவனத்தில் இருந்தவர் எங்களுடன் இணை வதால் நாங்களும் சிறப்பான நடைமுறைகளை பின்பற்ற முடியும் என்று கூறினார்.
ஓலா நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக ஓலா திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைவதில் உற்சாகமாக இருக்கிறேன் என்று ராஜிவ் பன்சால் தெரிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணைவதற்கு முன்பாக டாடா டெக்னாலஜீஸ், கேபிள் அண்ட் வயர்லெஸ் மற்றும் ஏபிபி ஆகிய நிறுவனங்களில் ராஜிவ் பன்சால் பணியாற்றினார். இன்போசிஸ் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். கடந்த நிதி ஆண்டில் இவரது சம்பளம் 4.62 கோடியாகும்.