நடப்பு ஆண்டில் அக்டோபர் வரையிலான காலத்தில் பிரை வேட் ஈக்விட்டி முதலீடு 1,400 கோடி டாலராக இருக்கிறது என்று கிராண்ட தார்ன்டன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 863 பரிவர்த்தனைகள் மூலம் 1,383 கோடி டாலர் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு நடந்துள்ளது.
கடந்த வருடம் இதே காலத்தில் 497 பரிவர்த்தனைகள் மூலம் 1,000 கோடி முதலீடு நடந்துள்ளது. ஐடி, எரிசக்தி, உற்பத்தி, வங்கி மற்றும் நிதிச்சேவைகள் மற்றும் பார்மா ஆகிய துறைகளில் முதலீடுகள் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு உயர்ந்துள்ளது.
அக்டோபரில் ரிநியூ பவர் வென்ச்சர்ஸ் நிறுவனம் 26.5 கோடி டாலர் முதலீட்டை ஏற்கெனவே உள்ள முதலீட்டாளார்கள் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் மூலமாக திரட்டியது.
அதேபோல சிங்கப்பூரை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஐஐஎப்எல் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை வாங்கியது. இந்த பரிவர்த்தனையின் மதிப்பு 17.3 கோடி டாலர் ஆகும்.
பிரைவேட் ஈக்விட்டி முதலீடு வரும் காலத்திலும் உயரும். அரசாங்கம் சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளதால் நிறுவ னங்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு இதே வேகத்தில் இருக்கும் என்று கிராண்ட் தார்ன்டன் தெரிவித் திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஐடி/ஐடிஇஎஸ் துறையில் அதிகமாக பிரைவேட் ஈக்விட்டி/ வென்ச்சர் கேபிடல் முதலீடு நடந் திருக்கிறது. மொத்த பரிவர்த் தனையில் 67 சதவீதம் ஐடி துறை யில் நடந்திருக்கிறது.