மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார். வட்டி விகிதம் குறைப்பு, வாராக் கடன்கள், ஆகியவை குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார்.
இந்த சந்திப்பில் வீட்டுக்கடன், கல்விக் கடன், கார்ப்பரேட் கடன் ஆகியவற்றை குறித்து மறுசீராய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜன் தன் யோஜனா மற்றும் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்களின் வளர்ச்சி மற்றும் அது சம்பந்தபட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக் கப்பட உள்ளதாக தெரியவந் துள்ளது.
பாங்க் ஆப் பரோடா ரூ.6,100 கோடிக்கு கருப்புப் பணம் அனுப்பியது போன்று இனி நடக்காமல் இருப்பதை தடுப்பதற்கு பொதுத்துறை வங்கிகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கபட உள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 6.03 சதவீதமாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் இது 5.20 சதவீதமாக இருந்தது.