170கிலோ பருத்தி கொண்ட 400 லட்சம் பேல்களை உற்பத்தி செய்து 2015-16-ம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பருத்தி உற்பத்தி நாடுகளில் இந்த ஆண்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என்றே வர்த்தக கணிப்புகள் கூறுகின்றன.
எனவே அதிக பருத்தி உற்பத்தி நாடுகளில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
உலக பருத்தி உற்பத்தி 2015-16-ல் 23.68 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டு உற்பத்தியைக் காட்டிலும் இது 8.6% குறைவு என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, மற்றும் சீனாவில் பருத்தி உற்பத்தி முறையே 17.7% மற்றும் 13.3% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வேளாண் துறையின் கணிப்பின் படி இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2015-16-ல் 370 லட்சம் பேல்களாகும். ஆனால் தற்போது 400 லட்சம் பேல்களை இந்தியா உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.