வணிகம்

ரூ.2,684க்கு தங்க பத்திரம்: ரிசர்வ் வங்கி நிர்ணயம்

பிடிஐ

தங்க பத்திரத்துக்கு ரிசர்வ் வங்கி விலை நிர்ணயம் செய் திருக்கிறது. ஒரு கிராம் 2,684 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வட்டி 2.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

குறைந்த பட்சம் 2 கிராம் முதல் அதிக பட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். கடந்த அக்டோபர் 26 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் இருந்த தங்கத்தின் விலை அடிப்படையில் முடிவு விலை சராசரியை அடிப்படையாக வைத்து ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பத்திரங்கள் தபால் நிலை யங்கள், வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 வருடங்கள் ஆகும். ஐந்து வருடங்களுக்கு பிறகே இந்த முதலீட்டினை திரும்ப பெற முடியும். இந்த கடன் பத்திரங்கள் மீதான வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT