வணிகம்

ஹவுசிங் டாட் காம்: புதிய சிஇஓ ஜாசன் கோதாரி

செய்திப்பிரிவு

ஹவுசிங் டாட் காம் நிறுவனத் துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஜாசன் கோதாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ராகுல் யாதவ் கடந்த ஜூலை மாதம் நீக்கப்பட்ட பிறகு 4 மாதம் தற்காலிக சிஇஓ தலை மையில் நிறுவனம் செயல் பட்டது.

ரிஷப் குப்தா தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி யாக இருந்தார். கோதாரி கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை பிஸினஸ் அலுவலராக நிறுவனத்தின் இணைந்தார். இப்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவால் ஒருமனதாக சிஇஓவாக தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக தலைமை நிதி அதிகாரி, தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஹவுசிங் டாட் காம் நிறுவ னத்துக்கு முன்பாக வாலியன்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். வார்டன் கல்லூரியில் இளங் கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.

10 கோடி டாலருக்கு மேல் பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT