வணிகம்

சென்செக்ஸிலிருந்து வேதாந்தா, ஹிண்டால்கோ வெளியேற்றம்

செய்திப்பிரிவு

மும்பை

பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சுரங்கத்துறை நிறுவன மான வேதாந்தா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண் டால்கோ ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதி லாக அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இணை கின்றன. வரும் டிசம்பர் 21-ம் தேதி இந்த மாற்றம் நடக்க இருக்கிறது.

அதேபோல பிஎஸ்இ 100 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து என்ஹெச்பிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி இன்பிரா டெல் மற்றும் மதர்சன்சுமி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ பட்டியலில் இணைகின்றன.

அதேபோல பிஎஸ்இ 200 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து 9 நிறுவனங்கள் வெளியேறுகின்றன. முத்தூட் பைனான்ஸ், யூனிடெக், ஐஎப்சிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியேறி ஐடிஎப்சி, பைசர் இந்தியா, அதானி என்டரபிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளே செல்கின்றன.

பிஎஸ்இ 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 22 நிறுவனங்கள் வெளியேறுகின்றன.

SCROLL FOR NEXT