வணிகம்

ஹீரோமோட்டோ கார்ப் பங்குகளை விற்றது பெய்ன் கேபிடல்

ராய்ட்டர்ஸ்

அமெரிக்க பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பெய்ன் கேபிடல் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் 29.8 லட்சம் பங்குகளை விற்றது. இந்த பங்குகளை ரூ.2,570 முதல் 2,600 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெய்ன் கேபிடல் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தில் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தது. இதற்கு முன்பு இருமுறை கணிசமாக பங்குகளை விற்றதன் மூலம் ரூ.3,980 கோடி பெற்றது. இப்போது 800 கோடி ரூபாய் அளவுக்கு விற்றிருக்கிறது. தவிர இந்த இடைப்பட்ட காலத்தில் டிவிடெண்டும் பெய்ன் கேபிடல் நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும்.

இது குறித்து பெய்ன் கேபிடல் மற்றும் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. செவ்வாய்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 2,645 ரூபாயில் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் பங்கின் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT