வணிகம்

விரைவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும்: மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா உறுதி

பிடிஐ

மத்திய அரசு நேரடி வரி விதிப்பு முறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரும் கணிக்கக் கூடிய, நியாயமான, எளிமையான வகையில் வரி முறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பரிந்துரைத்த தன் மூலம் வழக்குகளை குறைக்க முடியும் என்று பஞ்சாப், ஹரியாணா, டெல்லி தொழில் வர்த்தக சபையின் (பிஹெச்டி சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) 110-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார். நாங்கள் சீர்திருத்த இந்தியாவை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதைச் செயல்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் என்றும் சின்ஹா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மோடி ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் எடுக்கபட்டுள்ளன. மேலும், இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்க `ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை சீக்கிரம் தொடங்க இருப்பதாகவும் சின்ஹா தெரிவித்தார். கண்டுப் பிடிப்புக்கான சூழலை உருவாக்க தேவை உள்ளது. இதுதான் இந்தி யாவின் வளர்ச்சியை அதிகப்படுத் தும். நாங்கள் ஏழைகளுக்கான அரசாங்கம் மட்டுமல்ல பொருள் சந்தைக்கு சாதகமான அரசாங்கம் என்று கூறினார்.

நேற்று முன்தினம் சரக்கு மற்றும் சேவை வரி சட்டதிருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் இருப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) நாடாளுமன்றத்தில் அமல்படுத்தி விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த மாநாட்டில் சின்ஹா பேசியதாவது:

ஜிஎஸ்டியை பொறுத்தவரை நாங்கள் நம்பிக்கையாக இருக்கி றோம். சீக்கிரமாக ஜிஎஸ்டி நிறை வேற்றப்படும். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றினால் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய வரி அமைப்பில் புரட்சிகர மாற்றமாக இருக்கும்.

வரி சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதி யாக கார்ப்பரேட் வரி 30 சதவீதத் திலிருந்து 25 சதவீதமாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரி விலக்கு நிறுத்தப் படுவது தொடர்பாக நிதி அமைச்ச கம் பார்மா, ஆட்டோ துறை ஆகியவற்றின் கருத்துக்களை கேட்டு விட்டது. மேலும் நிறுவனங் களின் தலைவர்களின் கருத்து களை தெரிவிக்குமாறு கேட்டுள் ளோம் என்று கூறினார்.

பரிந்துரைகள் எற்கெனவே வைக்கப்பட்டுவிட்டது. அதன் மீது கருத்து தெரிவியுங்கள். நீங்கள் நினைப்பதை கூறுங் கள் என்று நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளோம். நிறைய நிறுவனங்கள் இந்த வரி விலக்கு ரத்து செய்யப்படுவது குறித்து வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் இது மிகப்பெரிய மாற்றத் தை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு

நாம் சில பத்தாண்டுகளுக்கு 8 முதல் 9 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இளைஞர் களுக்கு புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க முடியும். அதுமட் டுமல்லாது வேகமான வளர்ச்சி மூலம் 2 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரத்திலிருந்து 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும். நீண்ட காலத்திற்கு நிலையான வளர்ச்சியை வைத்திருப்பது அவசியம்.

உற்பத்தி திறன் நம்மிடம் இல்லையென்றால் தேவையை நிறைவு செய்வதில் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். மேலும் `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசாங்கம் உலகளாவிய சமூக பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. 12 கோடி மக்கள் எரிவாயு மானி யத்தை வங்கி கணக்கு மூலம் பெறுகின்றனர் என்று கூறினார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பொது முதலீடுகளை மத்திய அரசு அதிகரிக்கவுள்ளது. ரயில்வே துறையில் ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக சின்ஹா கூறினார்.

SCROLL FOR NEXT