தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. தற்போது 14 சதவீதமாக இருக்கும் சேவை வரி நேற்று முதல் 14.5 சதவீதமாக உயர்ந்தது. இதனால் டெலிபோன் கட்டணம், உணவு கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் மீதமுள்ள நான்கு மாதங்களில் இந்த வரி உயர்வு மூலம் 3,800 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பாக பெற்ற சேவை களுக்கு கூடுதல் வரி கிடையாது என்று நிதி அமைச்சகம் விளக்கி யுள்ளது. நிதி அமைச்சர் ஜேட்லி கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கும் போது, தேவைப்பட்டால் சில சேவைகளுக்கு கூடுதலாக 2% வரை வரி உயர்த்தப்படும் என்று கூறி இருந்தார். நடப்பு நிதி ஆண்டில் சேவை வரி மூலமாக 2.09 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.