வணிகம்

8 சுரங்கங்களை ஆன்லைன் மூலம் ஏலம் விட முடிவு

பிடிஐ

மத்திய அரசு மேலும் 8 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலம் நடத்துவதற்கான செயல்பாடு களை ஆரம்பித்துள்ளது. 4-வது சுற்றில் ஸ்டீல், சிமெண்ட், இரும்பு போன்ற துறைகளுக்கான 8 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை ஆன்லைன் மூலம் நடத்து வதற்கு முடிவு செய்துள் ளதாக மத்திய நிலக்கரித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தெரிவித் துள்ளார்.

3 கட்டமாக இதுவரை நடந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிலக் கரித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

இந்த சுரங்கங்களுக்கான ஏலம் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதியிலிருந்து ஜனவரி 22-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

மத்திய நிலக்கரித் துறை இணைச் செயலர் விவேக் பரத்வாஜ் இந்த ஏலத்தை நடத்துவார். மேலும் இந்த ஏலத்திற்கான டெண்டர் அழைப்பு நாளை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் டெண்டர் ஆவணம் டிசம்பர் 31-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்பட்டு, தேர்ந் தெடுக்கப்படும் ஏலதாரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் அறிவிக்கப் படும் என்று அனில் ஸ்வரூப் கூறினார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிரம்மபுரி மற்றூம் சுலியாரி நிலக்கரி சுரங்கங்கள், ஜார்க் கண்ட் மாநிலத்தில் உள்ள புண்டு மற்றும் கோண்டுல்புரா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோண்ட்காரி மற்றும் கப்பா ,மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெகனாத்பூர் ஏ மற்றும் ஜெகனாத்பூர் பி ஆகிய நிலக்கரி சுரகங்கங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த சுரகங்கங்கள் 114.32 கோடி டன் உற்பத்தி கொண்டது.

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 204 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. இதையெடுத்து இந்த ஏலம் நடத்தப்படுகிறது.

``மேலும் இரண்டாவது கட்டமாக 34 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 7 சுரங்கங்கள் 50 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்டது. ஒரு சுரங்கம் வழக்கில் இருக் கிறது. மீதமுள்ள சுரகங்கங்கள் ஒப்பு தல் கிடைத்தவுடன் உற்பத்தி தொடங்கப்படும். 55 கோடி டன் உற்பத்தியை அடைவதே இலக்கு” என்று அனில் ஸ்வரூப் கூறினார்.

SCROLL FOR NEXT