வணிகம்

2020-ல் மொத்த ஜிடிபியில் மொபைல் சேவை துறையின் பங்கு 8.2 சதவீதம்: ஜிஎஸ்எம்ஏ கணிப்பு

பிடிஐ

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் மொபைல் சேவை துறையின் பங்கு 8.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்த ஜிடிபியில் ரூ. 14 லட்சம் கோடி அளவுக்கு மொபைல் துறையின் பங்கு இருக்கும் என ஜிஎஸ்எம்ஏ கூறியுள்ளது.

2015 அறிக்கையின் படி, 2014 ஆம் ஆண்டு நாட்டில் மொத்த ஜிடிபியில் 6.1 சதவீதம் மொபைல் துறை பங்களித்துள்ளது. அதாவது மொத்த பொருளாதாரத்தில் ரூ. 7.7 லட்சம் கோடி பங்களித்துள்ளது

இந்த பங்கு 2020-ல் இரண்டு மடங்கு உயர்ந்து ரூ. 14 லட்சம் கோடியாக இருக்கும் என ஜிஎஸ்எம்ஏ-ன் ஆசிய தலைவர் அலாஸ்டேர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

மொபைல் நிறுவனங்கள் 2014 ஆம் ஆண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 லட்சம் கோடி வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இது 2020-ல் 50 லட்சம் கோடியாக நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் என கூறியுள்ளது.

இது இந்திய பொதுத்துறை நிதிக்கு குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை செய்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு வரிகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலமாகவும் ரூ 1.1 லட்சம் கோடி அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறது என்று அலாஸ்டேர் கிராண்ட் தெரி வித்தார்.

இந்தியா முழுவதும் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தெரிவித்துள்ளது மேலும் அந்த அறிக்கையில் தனிப்பட்ட பயனாளர்கள் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 45.3 கோடியாக இருந்தது. இந்த வருடம் 50 கோடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த அறிக்கையில் மொபைல் பிராட்பேண்ட் நெட்வொர்க் 2014 ஆம் ஆண்டு 11 சதவீத மொபைல் இணைப்புகளில் மட்டுமே இருந்தது. இது 2020-ல் 42 சதவீதமாக உயரும் என கூறப்பட்டுள்ளது.

இப்போது ஸ்மார்போன்களின் எண்ணிக்கை பெருகிவருதால் மொபைல் பிராட்பேண்ட் நெட் வொர்க் சேவை அதிகரிக்கும். உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி யாளர்கள் மற்றும் சர்வதேச விற்பனையாளர்கள் ஸ்மார்ட் போன்களை குறைந்த விலைக்கு வழங்கி வருவதும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அதிகப்படுத்தும் என்று அலாஸ்டேர் கிராண்ட் கூறினார். சர்வதேச அளவில் மொபைல் பயன்படுத்துபவர்களில் 13 சதவீத நபர்கள் இந்தியர்கள் ஆவார்கள்.

SCROLL FOR NEXT