ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் ரூ. 39.05 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 32.72 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு வருமானம் ரூ. 208.37 கோடியாகும். இதில் 27 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மொத்தம் ரூ. 857.93 கோடியை நிறுவனம் கடன் வழங்க அனுமதித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகமாகும்.
முதல் அரை ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 69.28 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 57.53 கோடியாக இருந்தது.