இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜனவரி (2020-21)-ல் 396.60 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட அளவை விட 10.63 சதவீதம் குறைவு.
2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த இறக்குமதி 398.47 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டு இதே காலகட்ட இறக்குமதியை விட 22.80 சதவீதம் குறைவு.
1. வர்த்தகம்
ஏற்றுமதிகள் (மறு ஏற்றுமதிகள் உட்பட)
2021 ஜனவரியில் ஏற்றுமதிகள் ரூ. 2,00,661.11 கோடி. கடந்த 2020 ஜனவரியில் ஏற்றுமதி ரூ.1,84,369.73 கோடியாக இருந்தது. தற்போது 8.84 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இறக்குமதிகள்
2021 ஜனவரியில் இறக்குமதி ரூ.3,06,951.56 கோடி. 2020 ஜனவரியில் இறக்குமதி ரூ. 2,93,452.69 கோடி. தற்போது 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிகள்:
2021 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.68,743.95 கோடி. 2020 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ. 92,773.42 கோடி. இது தற்போது 25.90 சதவீதம் குறைவு.
சேவை வர்த்தகம்
வணிகம் மற்றும் சேவைகளை ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, 2020-21 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 1.87 பில்லியன் அமெரிக்க டாலர். இந்த அளவு கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 2.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.