தாது, பில்லெட், சிறு உருண்டை, கழிவுத் துணுக்குகளிலிருந்து உருக்கப்பட்ட எஃகு போன்று குறிப்பிட்ட தர அளவீடுகளுக்கு பொருத்தமான அனைத்து வகை எஃகுகளையும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிக்கு பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு தேசிய தரச்சான்று அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் அந்த எஃகு சோதனை செய்யப்படும். பங்குதாரர்களுடனான ஆலோசனை மற்றும் விவாதங்கள், தொழில்நுட்ப கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது.
முன்னதாக, முதன்மை/ ஒருங்கிணைந்த எஃகு தயாரிப்பாளர்களால் உருவாக்கப்படும் எஃகுக்கு மட்டுமே ஒப்பந்த ஒதுக்கீடு வழங்கப்படும். எஃகு விலைகளின் உயர்வினால் தேசிய நெடுஞ்சாலையின் கட்டமைப்பு தொகை பாதிக்கப்படும் என்பதால் நெடுஞ்சாலை பணியின் தரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையிலான அனைத்து வழிகளையும் மீண்டும் ஆய்வு செய்யுமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்திருந்தார்.