வணிகம்

ராயல் என்பீல்டு விற்பனை 73% வளர்ச்சி

செய்திப்பிரிவு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை வளர்ச்சி 73 சதவீதமாக உயர்ந்து 44,138 வாகனங்கள் விற்கப்பட் டிருக்கின்றன. தவிர ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரிலும் சொந்த விற்பனையகங்களை திறக்க நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்த நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாட்டில் 80 டீலர்களும், ஸ்பெயின் நாட்டில் 25 டீலர்களும் உள்ளனர். முதல் ஏழு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் 60 சதவீத வளர்ச்சியும், ஸ்பெயின் நாட்டில் 300 சதவீத விற்பனை வளர்ச்சியும் இருக்கிறது.

எம் அண்ட் எம்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 20 சதவீதம் உயர்ந்து 51,383 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் இதே காலத்தில் 42,780 வாகனங்கள் விற்பனையாயின. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டியூவி300 வாகன விற்பனை அதிகமாக இருப்பதால் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.

உள்நாட்டு சந்தை விற்பனை 21 சதவீதமும், ஏற்றுமதி 3 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வட்டி விகிதம் குறைவது மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகிய காரணங்களால் வருங்காலத்தில் விற்பனை வளர்ச்சி இதே நிலையில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோடா

அக்டோபர் மாதத்தில் டொயோடா 13,601 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 12,556 வாகனங்கள் விற்பனையானது. உள்நாட்டில் 12,403 வாகனங்களும். 1,198 வாகனங்களை ஏற்றுமதியும் செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT