வணிகம்

ஜிஎஸ்டி இழப்பீடு; 15-வது தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 15-வது தவணையாக ரூ. 6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக 15-வது தவணையாக ரூ. 6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.

இதில், ரூபாய் 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூபாய் 483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.

மிச்சமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் ஏற்படவில்லை.

சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்த கடனை திரட்டுகிறது.

இதுவரை, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ. 90,000 கோடி கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது.

இது தவிர, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 9627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூபாய் 5569.70 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய அரசு, சத்திஸ்கர் அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை $100 மில்லியன் மதிப்பிலான திட்டத்தில் இன்று கையெழுத்திட்டன.

சத்திஸ்கரில் பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளில் ஊட்டச்சத்து சார்ந்த வேளாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் ஆதரவளிக்கும்.

சுமார் 1,000 கிராமங்களில் உள்ள 1,80,000 குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

SCROLL FOR NEXT