பொதுத்துறை வங்கியான இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி செப்டம்பர் காலாண்டில் 6,769 கோடி ரூபாயை மொத்த வருமானம் ஈட்டி இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,440 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது.
முதல் ஆறு மாதங்களில் மொத்த வருமானம் 13,442 கோடி ரூபாய். கடந்த வருடம் இதே காலத்தில் வங்கி வருமானம் 12,725 கோடி ரூபாய். ஆனால் வங்கியின் நஷ்டம் அதிகரித்து ரூ. 550 கோடி யாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நஷ்டம் 245 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 11%, நிகர வாராக்கடன் 7.41 சதவீதமாகவும் இருக்கிறது.