வணிகம்

ரியல் எஸ்டேட் துறையில் தேக்க நிலை விரைவில் முடிவுக்கு வரும்: அருண் ஜேட்லி

பிடிஐ

ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் தேக்க நிலை விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பையில் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜேட்லி, இந்திய பொருளாதார வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை மிக முக்கிய பங்கு வகிக்கும் என நம்புவதாக கூறினார்.

ரியல் எஸ்டேட் துறையானது சந்தைப் பொருளாதார அடிப்படை யில்தான் வளர்ச்சியை எட்ட வேண்டும். வெறுமனே மானியம் மற்றும் சலுகைகளை நம்பி வாழக் கூடாது என்று சுட்டிக் காட்டினார்.

வீடு கட்டுவதற்கு உரிய நிலம் கிடைப்பது எளிதாக இருக்க வேண் டியது மிகவும் முக்கியம். ஏற் கெனவே வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைத்துள் ளன. இதனால் வீடுகளின் கட்டு மான செலவு குறையும் என்றார்.

தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு நான்கு முறை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. இது இத்துறைக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். இவையெல்லாம் இத்துறையினரின் நீடித்த வளர்ச்சிக்கான விஷயங்கள் என்றார்.

இப்போதைய சூழலில் இதுவரை இத்துறையில் நிலவி வந்த தேக்க நிலை விரைவில் முடிவுக்கு வரும்.

சர்வதேச அளவில் பொருளா தார சூழல் நமக்கு சாதகமாக இல்லை. நமது ஏற்றுமதி குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும் என்றார்.

சர்வதேச அளவிலான தாக்கத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. அடிப்படையில் நமது பொருளாதாரம் வலுவாக இருப்பதால்தான் சர்வதேச அளவிலான பாதிப்புகளால் நாம் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

நமது வரி வருவாய் அதிகரிப் பானது பொருளாதார வளர்ச்சிக் கான அறிகுறிகளாக தெரிகின்றன. மின்னுற்பத்தியை அதிகரிப்பது நமக்குள்ள மிகப் பெரும் சவா லாகும் என்றார் ஜேட்லி.

SCROLL FOR NEXT