நாட்டின் மொத்த சூரிய மின் உற்பத்தி 2016 ஆம் ஆண்டிற்குள் 3,645 மெகா வாட்டாக உயரும் என எரிசக்தி ஆலோசனை நிறுவனமான மெர்காம் கேபிடல் குரூப் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் 2,150 மெகா வாட் அளவிற்கு சூரிய உற்பத்தி இருக்கும் எனவும் 2016 ஆம் ஆண்டில் இது 3,645 மெகா வாட் அளவிற்கு உயரும் என கணித்துள்ளதாக மெர்காம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து மெர்காம் கேபிடல் குரூப் சிஇஓ மற்றும் துணை நிறுவனர் ராஜ் பிரபு கூறுகையில், “சமீபத்தில் எரிசக்தி தொடர்பான முக்கியமான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏலம் மற்றும் பத்திரங்கள் மூலம் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.
நீண்ட தாமதத்திற்கு பின்பு என்டிபிசி நிறுவனம் ஜவர்ஹலால் நேரு சூரிய திட்டத்தின் கீழ் 3,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஏலத்தை அறிவித்துள்ளது.