ஐஆர்சிடிசி நிறுவனம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலமாக ரூ.20,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ஆன்லைன் மூலமான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.15,410 கோடி வருமானம் ஈட்டியது. மார்ச் 2015-ம் நிதி ஆண்டில் 20,620 கோடி ரூபாய் வருமான ஈட்டியுள்ளது. வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.130 கோடி ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது 72 கோடியாக இருந்தது. இணையம் மூலமாக இ-டிக்கெட்டிங் விற்பனையில் வலுவான நிலையில் இருப்பதுதான் இதற்கு காரணம் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் புக்கிங் முறையில் மாற்றங்கள் கொண்டுவந்ததுதான் முக்கிய காரணம் என்று ஐஆர்சிடிசியின் தகவல் தொடர்பு மேலாளர் சந்தீப் தத்தா கூறினார். ஏற்கெனவே இருந்த முறையில் ஒரு நிமிடத்துக்கு 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும், தற்போதைய மேம்படுத்தப்பட்ட முறையில் ஒரு நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும்.
ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் 13.4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளோம். 2002-ம் ஆண்டுகளில் ஒரு நாளில் 27 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ரயில் டிக்கெட்டுகள் விற்பனையில் 55 சதவீதம் ஆன்லைன் மூலமாக நடக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் 13.4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளோம்.