சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டு வரும் 26 நிறுவனங்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி விருது வழங்கி இருக்கிறது. கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டன் அண்ட் பிரட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) இணைந்து நாட்டில் சிறப்பாக செயல்படும் 26 நிறுவனங்களுக்கு இந்த விருதினை வழங்கின. 23 பிரிவில் இருந்து இந்த தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதுடெல்லியில் நடந்த இந்த விழாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே.வெங்கட்ராமன், நாட்டின் வளர்ச்சியில் சிறு நிறுவனங்களின் பங்கு முக்கியமானது, அவர்களின் வளர்ச்சிக்கு வங்கி உறுதுணையாக, உதவியாக இருக்கும் என்று கூறினார்.