வணிகம்

இன்டோ கல்ஃப் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இன்டோரமா நிறுவனம் வாங்க ஒப்புதல்

செய்திப்பிரிவு

இன்டோ கல்ஃப் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இன்டோரமா நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

போட்டியியல் சட்டம் 2002 பிரிவு 31 (1)-ன் கீழ் இன்டோ கல்ஃப் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இன்டோரமா இந்தியா நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இன்டோ கல்ஃப் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான பாஸ்பேட், யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள், வேளாண் இடுபொருட்கள், அதற்கு தேவையான ஊட்டச்சத்து ரசாயனங்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறது.

SCROLL FOR NEXT